- Home
- Astrology
- குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 2026-ல் அளவில்லாத நன்மைகளைப் பெறவுள்ள ராசிகள்.!
குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 2026-ல் அளவில்லாத நன்மைகளைப் பெறவுள்ள ராசிகள்.!
Vipreet Rajyog 2026: 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

விபரீத ராஜயோகம் 2026
ஜோதிடத்தின் படி குரு பகவான் 2026 ஆம் ஆண்டில் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்குள் ஜூன் 2, 2026 அன்று அதிகாலை 6:30 மணிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசி என்பது குரு பகவான் உச்சம் பெரும் ராசியாகும். குரு உச்சம் பெறுவதால் விபரீத ராஜயோகம் உருவாகிறது. மேலும் குரு பகவான் 2026 ஆம் ஆண்டில் ஹன்ஸ் போன்ற மகத்தான ராஜ யோகங்களையும் உருவாக்குகிறார். குரு பகவான் உச்சம் பெரும்பொழுது உருவாகும் விபரீத ராஜயோகத்தால் சில ராசிகள் அதிக பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 11வது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். 11 வது வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியாக அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகி, மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கையில் இதுவரை காணாத அளவிற்கு அமைதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கும். வேலை மாறுதல் அல்லது புதிய வேலை தேடுவதற்கு சாதகமான கால கட்டமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடித்து பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுகளைப் பெறுவீர்கள். அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப தலைவிகள் சிறிய தொழில்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் கைகொடுக்கும். நிதி நிலைமை மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வக்ர நிலையில் பயணித்து பின்னர் நேர் கதிக்கு மாறுவதால் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். முதலீடுகள் லாபகரமாக மாறும். அபாயகரமான முதலீடு கூட நேர்மறை பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். தம்பதிகளுக்கு இடையே பரஸ்பர புரிதலும், அன்பும் அதிகரிக்கும். திருமணமாகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தடைகள் மற்றும் எதிர்ப்புகள் விலகி வெற்றிக்கு வழிகள் பிறக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

