பலத்தை இழந்த சனி பகவான்.! பிப். 2026 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்.!
Shani Bhagavan Loses Power for 76 days: டிசம்பர் 5, 2025 முதல் சனி பகவான் பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். இதனால் அடுத்த 76 நாட்களுக்கு சனியின் தாக்கம் குறைய உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பலவீனமான நிலையில் சனி பகவான்
ஜோதிடத்தில் சனி பகவான் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். அவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கக் கூடியவர். அவரது நிலையில் ஏற்படும் மாற்றம் என்பது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் அவர் பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். பிப்ரவரி 2026 வரை அடுத்த 76 நாட்கள் அவர் பலவீனமான நிலையிலேயே பயணிக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைய உள்ளது.
ஜோதிடத்தின்படி ஒரு கிரகம் ஜீரோ டிகிரி நிலையில் இருந்தால் அது வலுவிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அந்த கிரகம் முழுமையான பலன்களைத் தராது. மேலும் ஒரு கிரகம் ஜீரோ டிகிரி முதல் ஆறு டிகிரி வரை இருக்கும் பொழுது அது குழந்தை பருவம் என்றும், இந்த காலகட்டத்தில் அந்த கிரகத்தால் அதிகபட்ச பலன்களை கொடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. டிசம்பர் 5ஆம் தேதி சனி பகவான் ஜீரோ டிகிரி நிலையில் பயணிக்க தொடங்கியுள்ளார். அவர் பிப்ரவரி 2026 அன்று ஆறு டிகிரிக்கு நகர இருக்கிறார். எனவே இந்த காலகட்டம் வரை அவரால் சுப பலன்களை தர முடியாது.
இதுவரை சனி பகவான் தாக்கத்தால் கஷ்டப்பட்டு வந்த சில ராசிக்காரர்கள் இந்த 76 நாட்கள் அதிலிருந்து விடுதலை பெற இருக்கின்றனர். சனி பகவானின் வலுவிழுந்த நிலை காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியின் 4 மற்றும் 5 ஆம் வீட்டின் அதிபதியாக இருக்கும் சனி பகவான் தற்போது 6ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த சஞ்சாரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டத்தை வழங்கும். தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். படித்து முடித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு நேர்காணல் அழைப்புகள் வரக்கூடும்.
நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்கலாம். கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகளைப் பெறுவீர்கள். கடன்கள் குறையும். நிதி நிலைமை வலுப்பெறும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது அல்லது விற்பது ஆகியவை வெற்றியைத் தரும்.
கும்பம்
கும்ப ராசியின் இரண்டாவது வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்க இருக்கிறார் இரண்டாவது வீடு என்பது தன ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சனியின் பலம் குறைவாக இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் தீரும். இதன் காரணமாக மனதில் அளவில்லாத அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
நிதி நிலைமை வலுப்பெறும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படத் துவங்கும். மேலும் சனியின் பார்வை 4,8,11 ஆம் வீடுகளில் விழுவதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும். பழைய கடன்களை தீர்ப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். மன அழுத்தம் குறையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஒன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் சனி பலவீனமாக இருப்பதால் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். தடைபட்டு நின்ற வேலைகள் வேகமாக நகரத் துவங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறக்கூடும். சனி பகவானால் தடைபட்ட திட்டங்கள் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கும்.
திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து பொருத்தங்கள் தேடி வரும். உறவிலிருந்த சிக்கல்கள் தீரும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் வளர்ச்சியையும், லாபத்தையும் பெறுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுத்துவங்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

