- Home
- Astrology
- இந்த ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி.! ஏழ்மை நீங்கி ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
இந்த ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி.! ஏழ்மை நீங்கி ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Sukra Peyarchi 2025: சுக்கிர பகவான் விரைவில் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி, தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிர பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, கலை, பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் காரகராவர். இவர் டிசம்பர் 20, 2025 அன்று விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சுமார் 12 மாதங்களுக்குப் பிறகு குருவின் ராசிக்குள் சுக்கிரன் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததும், அதிர்ஷ்டகரமானதாகவும் கருதப்படுகிறது. சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டப் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இது மிகவும் அனுகூலமான பெயர்ச்சியாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் கூடும். நீங்கள் தொடங்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய திசை உருவாகும். வெளிநாடு தொடர்பான காரியங்கள் கைகூடும். வெளிநாட்டில் வேலை, தொழில் விரிவாக்கம், உயர்கல்வி ஆகியவற்றைப் பெறலாம். குடும்ப உறவுகள் வலுப்பெற்று அன்னோன்யம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக மன மகிழ்ச்சி கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் புதிய நண்பர்கள் அல்லது தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் இருந்து வரன் தேடி வரும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். தொழில் மற்றும் முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் நோக்கத்திற்காக நீங்கள் செய்யும் பயணம் லாபகரமானதாக அமையும். நிதி நிலைமை எதிர்பாராத வகையில் மேம்படும். இருப்பினும் அதிகப்படியான செலவுகளை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் வேலையிலும், தொழிலிலும் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, வருமானத்தில் திடீர் அதிகரிப்பு, புதிய ஒப்பந்தங்கள் ஆகியவை கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். கலைத்திறன் மற்றும் படைப்புத்திறன் மேம்படும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சுக்கிர பகவான் நுழைவது மிகவும் அதிர்ஷ்டகரமானதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் நல்ல சூழலை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் பண வரவு பெருகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் ஈடேறும். புதிய தொடக்கங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் திருப்தியை காண்பீர்கள். முதலீடு சார்ந்து நீங்கள் எடுக்கும் அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும். வீடு, மனை, நிலம், தங்கம், வெள்ளி, அசையா சொத்துக்கள் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

