Dec 12 Dhanusu Rasi Palan : டிசம்பர் 12, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 12, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் நாள் முழுவதும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் முடிவுகள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

நிதி நிலைமை:

எதிர்பாராத சிறு தொகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தேவைகள் அல்லது ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்காக செலவுகள் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்கால தேவைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். சேமிப்பை பலப்படுத்த வேண்டிய நாளாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்றைய நாள் குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். திருமணமானவர்களுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். இன்றைய நாள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரங்கள்:

வெள்ளிக்கிழமைக்கு உரிய தெய்வமான மகாலட்சுமி தாயார் அல்லது அம்பாளை வழிபடுவது சிறப்பு. பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த உணவு அளிப்பது நற்பலங்களை அதிகரிக்கும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற் பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.