- Home
- Astrology
- ஹோலி முடிந்த பின் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! மார்ச் 16 முதல் 3 ராசிகளின் தலைவிதி மாறும்.!
ஹோலி முடிந்த பின் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! மார்ச் 16 முதல் 3 ராசிகளின் தலைவிதி மாறும்.!
Mangal Chandra Yuti Effects 2026 : ஹோலி 2026-க்குப் பிறகு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. இது 12 ராசிகளுக்கும் சுப பலன்களைக் கொடுத்தாலும், மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

மகாலட்சுமி ராஜயோகம் 2026
ஜோதிடத்தின்படி, மார்ச் 16, 2026 முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்க இருக்கிறது. செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிடத்தில் இந்த ராஜயோகம் செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இது 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மகாலட்சுமி ராஜயோகத்தின் பலன்கள்
செவ்வாயும் சந்திரனும் கேந்திர அல்லது திரிகோண வீட்டில் இணைந்தால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும். செவ்வாய் தைரியம், வலிமை மற்றும் ஆற்றலை குறிக்கும் கிரகமாகும். சந்திரன் மனம், செல்வம் மற்றும் செழிப்பை குறிக்கும் கிரகமாகும். இந்த இரண்டு கிரகங்களின் இணைவானது நிதி ஆதாயம், சமூக அந்தஸ்து மற்றும் மரியாதையை வழங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பழைய முதலீடுகள் லாபம் தரும். சம்பள உயர்வு கிடைக்கும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முடிக்கப்படாத வேலைகள் விரைவில் முடிவடையும். இழுபறியில் இருந்த விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.
கடகம்
மகாலட்சுமி ராஜயோகத்தின் விளைவாக கடக ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் தடைபட்டு நின்ற காரியங்கள் சரியான திசையில் செல்லும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். மகாலட்சுமி ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். சட்ட சிக்கல்களில் வெற்றி கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்கு கடன் எளிதாகக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏற்ற சூழல் உருவாகும். ஒட்டுமொத்தமாக வாழ்வில் புதிய திசைகள் உருவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

