- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
2026 டி20 உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. வெறும் 100 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம். எப்படி டிக்கெட் புக் செய்து? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 டி20 உலகக்கோப்பை
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 அணிகள் விளையாடுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்
பிப்ரவரி 7ம் தேதியான தொடக்க நாளில் பாகிஸ்தான்-நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேசம், இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் பைனலுக்கு சென்றால் இறுதிப்போட்டி கொழும்புவில் நடக்கும்.
100 ரூபாயில் இருந்து டிக்கெட் விலை தொடக்கம்
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6:45 மணி முதல் ஆன்லைன் வாயிலாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் டிக்கெட் விற்பனை வெறும் 100 ரூபாயில் இருந்து தொடங்க உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முதற்கட்ட டிக்கெட் விற்பனை ரூ.100 முதல் ரூ.1,000 வரை விலையில் தொடங்கி 2 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. முதற்கட்டமாக லீக் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யபட உள்ளன.
டிக்கெட் எப்படி புக் செய்வது?
ரசிகர்கள் tickets.cricketworldcup.com or https://tickets.cricketworldcup.com/explore/c/icc-mens-t20-world-cup-2026 என்ற இணையதளம் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 2026 டி20 உலகக்கோப்பை டிக்கெட்டை புக் செய்ய கீழ்கண்ட வழிகளை பின்பற்றலாம்:
* முதலில் tickets.cricketworldcup.com ஐ.சி.சி டிக்கெட் போர்ட்டலுக்குச் செல்லவும்.
* பின்பு உங்கள் மின்னஞ்சல்/தொலைபேசி மூலம் உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.
* நீங்கள் விரும்பும் போட்டி, இடம் மற்றும் தேதியைத் தேர்வுசெய்யவும்.
* உங்கள் இருக்கை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
* பெயர் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, தேவைப்பட்டால் ஐடிகளை உறுதிப்படுத்தவும்.
* UPI, ஏடிஎம் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் பாதுகாப்பாக பணம் செலுத்துங்கள்.
* கடைசியாக உங்கள் மின்னஞ்சல் அல்லது உங்கள் ICC கணக்கிலிருந்து உங்கள் மின்-டிக்கெட்/QR குறியீட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

