
US vs Ukraine
உக்ரைன் உடனான இந்த சண்டை மற்ற நாடுகளையும் பாதிக்கும். அமெரிக்காவின் இந்த மெத்தனப்போக்கு அமெரிக்காவின் மற்ற நட்பு நாடுகளையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மற்ற உலகப்போர்கள்.. மோதல்கள், சண்டைகளில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை. இது இந்தியா - சீனா இடையிலான மோதலில் எதிரொலிக்கும்.இந்தியா மீது சீனா போர் தொடுத்தால் லடாக்கில், அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா தாக்கினால்.. அமெரிக்கா வந்து இந்தியாவிற்கு உதவும் என்று நம்பலாம். ஆனால் இனி அப்படி இல்லை. இது புதிய அமெரிக்கா.. இந்த அமெரிக்கா உலக சண்டைகளில் தலையிட விரும்பவில்லை. இதனால் இந்தியாவிற்கு ராஜதந்திர.. போர் தந்திர ஆதரவுகள் இல்லை