ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர்த் திட்டங்கள் ஊடகத்தில் கசிவு! டிரம்ப் அரசுக்கு நெருக்கடி!

Share this Video

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் தவறுதலாக அட்லாண்டிக் பத்திரிகை தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க்க்கு சென்று சேர்ந்துள்ளது.ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூற்றுப்படி, இந்தக் குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் இருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர். இந்தக் குழுவில் சேருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடமிருந்து தனக்கு இன்வைட் வந்ததாக ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூறுகிறார்.மிகவும் ரகசியமான செயல்பாடுகள் வெளியே கசிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகுற்றம்சாட்டியுள்ளது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video