அமெரிக்க குடியுரிமை | பணக்கார வெளிநாட்டினருக்காக 'கோல்டு கார்டு' திட்டம்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அமெரிக்கா பணக்கார வெளிநாட்டினருக்காக "கோல்டு கார்டு" ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பணக்கார வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறி வாழவும் வேலை செய்யவும் முடியும்.