Trump vs Zelensky | வெள்ளை மாளிகையில் சண்டை போட்ட டிரம்ப் - ஜெலன்ஸ்கி! பாதியில் வெளியேறிய ஜெலன்ஸ்கி!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது போரில் உக்ரைன் வலுவான நிலையில் இல்லை என்று டிரம்ப் கூறினார். உக்ரைன் மக்களின் உயிரோடு விளையாடுவதோடு, அமெரிக்காவையும் ஜெலன்ஸ்கி அவமதிப்பதாக சாடிய டிரம்ப், ஜெலன்ஸ்கியால் 3ம் உலகப்போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் காரசார விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.