
Trump vs Zelensky
ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் விமர்சித்த நிலையில் டிரம்ப்க்கும் ஜெலென்ஸ்கியும் இடையே மோதல் வலுத்துள்ளது. இது குறித்து ஜெலென்ஸ்கி ''உக்ரைன் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் உக்ரைன் ரஷ்யா போருக்கு தீர்வு காண முடியாது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு வலுவன அமைப்பை உருவாக்க வேண்டும். அமெரிக்கா ரஷ்யா இணைந்து மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்றார்.