
அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகளுக்ககாக கூட்டாட்சி சலுகைகளை நீக்கம் ! கையெழுத்திட்ட டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதை கொள்கையாக வைத்துள்ளார். அதன்பேரில் இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்நத சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகளுக்ககாக கூட்டாட்சி சலுகைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.