
கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தம் ...அதிரடியாக அறிவித்த டிரம்ப் !
கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்காக கனடா செலுத்த வேண்டிய வரி விகிதங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் அமெரிக்கா வெளியிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.