Tonga Tsunami Warning| டோங்கா தீவில் மிகப்பெரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
Tonga Tsunami Warning : பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் தீவு நாடான டோங்காவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் என்ற அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.48 மணிக்கு டோங்காவை மையமாக வைத்து நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோலேவா மற்றும் நுகுஅலோஃபா உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் குடியிருப்பாளர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.