Chicago Rally

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்புவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் இருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதை காட்டுகிறது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Video

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வருகிறது. கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். வழக்கமாக நடக்கும் தாக்குதலை போல் அல்லாமல் இந்த முறை புதிய யுக்தியுடன் உலக நாடுகளுன் ஒத்துழைப்பும், பலம் பொருந்தியதுமான இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலைஇ எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்புவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் இருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதை காட்டுகிறது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து சிக்காகோவில் மக்கள் மாபெரும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Video