Viral : இலங்கை அதிபர் ரணில் அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்! மீண்டும் ஆர்ப்பாட்ட பேரணி! ஏராளமான மக்கள் பங்கேற்பு

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறைகளை கண்டித்து கொழும்பு துறைமுக ரயில்நிலைத்திலிருந்து மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 

First Published Jul 22, 2022, 12:03 PM IST | Last Updated Jul 22, 2022, 12:03 PM IST

இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றதைத் தொடர்ந்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் சுற்றித்திரியும் நபர்களையும் போலீசார் கைது செய்வதாக கூறப்படுகிறது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் தாக்கி வருகின்றனர். இந்த அடக்குமுறைகளை கண்டித்து கொழும்பு துறைமுக ரயில்நிலைத்திலிருந்து மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.