Watch : இலங்கை போராட்டத்திற்கு முடிவு கட்டும் ரணில் அரசு! பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையகப்படுத்தப்பட்டு இருந்த அதிபர் அலுவலகமும், வளாகமும் பாதுகாப்பு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரியும் நபர்களையும் போலீசார் கைது செய்வதாக கூறப்படுகிறது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் தாக்கி வருகின்றனர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First Published Jul 22, 2022, 10:25 AM IST | Last Updated Jul 22, 2022, 10:25 AM IST

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தோல்வியடைந்த அரசைக் கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிரையே விரட்டியடித்து ஆளுநர் மாளிகையை கைப்பற்றினர். தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றதைத் தொடர்ந்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையகப்படுத்தப்பட்டு இருந்த அதிபர் அலுவலகமும், வளாகமும் பாதுகாப்பு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரியும் நபர்களையும் போலீசார் கைது செய்வதாக கூறப்படுகிறது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் தாக்கி வருகின்றனர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Video Top Stories