
எரிச்சலை ஏற்படுத்திய ட்ரம்ப்! ரஷ்யா பக்கம் ரூட்டை மாற்றிய பிரதமர் மோடி - புடின்க்கு அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா அதிபர் விளாதிமர் புதின் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனில் சமீபத்திய முன்னேற்றம் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சி நிரலில் முன்னேற்றம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் விரிவான உரையாடலை நடத்தினர்.