
PM Modi in Srilanka
இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அதிபர் அனுரா குமார திசநாயகா உற்சாக வரவேற்பு அளித்தார். இன்று இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கைக்குப் புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் 6 மூத்த அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிஸ்சா, அனில் ஜயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிஸ்ஹந்தா அபேசேனா உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்