Watch : பெட்ரோல் பங்கு முன்பு 3-4 நாட்களாக காத்திருக்கும் மக்கள்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எரிபொருள் இல்லாத நிலையில் ஏராளாமான வாகனங்கள் பெட்ரோல் பங்குகள் முன்பு வரிசையில் காத்து கிடக்கின்றன.
இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் இல்லாத நிலையில் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள அனைத்து பெட்டரோல் நிரப்பும் மையங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் காத்துகிடக்கின்றன.