
Watch : மாலத்தீவு - மாலியில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு!
மாலத்தீவு தலைநகர் மாலியில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
மாலத்தீவு தலைநகர் மாலியில், கேரேஜ் ஒன்றில் ஏற்பட்ட தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் இந்தியர்கள் 9 பேர் உட்பட 11 பேர் உயிழந்தனர். மற்றொருவர் வங்கதேசத்தை தேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் குறித்தும் அறிய உதவி அழைப்பு எண்களை மாலி பேரிடர் மீட்பு ஆணையம் அறிவித்துள்ளது. +9607361452 ; +9607790701," இந்த எண்களை தொடர்பு கொண்டு தகல்களை அறியலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source
