Myanmar Earthquake | மத்திய மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு !
மியான்மரின் மத்திய பகுதியில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, தலைநகர் நேபிடாவிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சாகைங் நகரிலிருந்து 16 மற்றும் 18 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் பாதிப்பு தாய்லாந்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டது. X இல் பரவிய பயங்கரமான வீடியோக்கள் கட்டிடங்கள் குலுங்குவதையும், மக்கள் பீதியில் தெருக்களுக்கு ஓடுவதையும் காட்டுகின்றன. பெரிய கட்டிடம் ஒன்று நிமிட நேரத்தில் தரைமட்டமாகும் வீடியோ உறைய வைக்கிறது.