
அவமானப்படுத்திய அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானம் வாங்குகிறதா மத்திய அரசு?
அமெரிக்கா இந்தியாவின் முதுகில் குத்தியிருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை இந்தியா வாங்குமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இதே கேள்வியை காங்கிரஸ் எம்பி பல்வந்த் பஸ்வந்த் வான்கடே எழுப்பி இருந்தார். இதற்கு மத்தி வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், எழுத்தப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.