
IND VS PAK
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகப் பல முறை கூறி வருகிறார். இதற்கிடையே நேட்டோ மாநாட்டிலும் அதே கருத்தைக் கூறிய டிரம்ப், வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து மிரட்டினேன் என்பது போலப் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.