India US Tariff Talks | அமெரிக்கா பொருட்களின் வரியை குறைக்க இந்தியா திட்டம்!
India US Tariff Talks : அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நம்பிக்கையில், பாதாம் மற்றும் கிரான்பெர்ரி போன்ற அமெரிக்க பண்ணை பொருட்களின் இறக்குமதி மீதான வரிகளைக் குறைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.வர்த்தக கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இரு தரப்பினருக்கும் சந்தை அணுகலை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த திட்டம் வந்துள்ளது.