Asianet News TamilAsianet News Tamil

3 நாளில் உயிரைக் கொல்லும் Virus : China விஞ்ஞானிகள் உருவாக்கம்!

சீனா மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை கொண்டு ஒரு புதிய கொடிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.

 

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைகழக விஞ்ஞானிகள், எபோலா வைரசின் சில பகுதிகளை கொண்டு ஒரு புதிய உயிர்க்கொல்லி வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Video Top Stories