
Blue Ghost Lunar Lander
டெக்சஸ்சை சேர்ந்த “பயர்பிளை ஏரோ ஸ்பேஸ்” என்ற தனியார் நிறுவனம் ப்ளூ கோல்ட் மிஷன்-1 என்ற பெயரில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.இதற்கான விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் உதவியுடன் இந்நிறுவனம் விண்ணில் ஏவியது. நிலவில் தரையிறங்கிய விண்கலம், மண்ணை பரிசோதிக்கும் கருவி, கதிர்வீச்சை தாங்கும் கருவி உள்ளிட்ட 10 உபகரணங்களை ஏந்திச் சென்றது.மேலும் வரும் 14ம் தேதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தை இந்த விண்கலம் படம் பிடிக்க உள்ளது.