போர் மேகங்கள்: இஸ்ரேலில் இருந்து ஏசியாநெட் செய்தி சிறப்பு கவரேஜ்!

ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலின் வாழ்க்கையை ஏசியாநெட் விளக்குகிறது

Share this Video

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர், ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலின் வாழ்க்கையைப் பற்றி அங்கிருந்து விளக்குகிறார். போர்க்களத்தில் இருந்து பேசும் அவர், தாயகத்தைப் பாதுகாக்க எவ்வாறு உறுதியுடன் இஸ்ரேலிய மக்கள் இருக்கின்றனர் என்பதை நமக்கு காட்டுகிறார்.

இந்த மோதலில் போர்வீரர்களாக முன்னோக்கிச் செல்ல இஸ்ரேலின் வீரர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் தயாராக உள்ளதை நமக்கு சுட்டிக்காட்டும் அவர், சைரன்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை, பதுங்கு குழிகள், அவை செயல்படும் விதம் குறித்தும் நமக்கு விளக்குகிறார்.

ஏவுகணை தாக்குதல், பீரேங்கிகளுக்கு மத்தியில் இருந்து பேசும் அஜித் ஹனமக்கனவர், அழிவுகரமான தாக்குதல்களுக்குப் பிறகு தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பாடுபடும் இஸ்ரேலியர்களின் உறுதியும் விடாமுயற்சியை நமது கண் முன் நிறுத்துகிறார்.

Related Video