train accident : கோர ரயில் விபத்து.. பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து - 30 பேர் பலியான சம்பவம்

பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Video

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் விரைந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Related Video