தேசிய அளவிலான பெஞ்ச் பிரஸ் & டெட் லிப்ட் போட்டிகள் - தங்கப்பதக்கம் வென்று அசத்திய திருப்பூர் ஆதித்யா!

Weight Lifter Aditya : திருப்பூர் பகுதியை சேர்ந்த ஆதித்யா என்ற 16 வயது மாணவன் தேசிய அளவிலான பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட் லிப்ட் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Share this Video

குஜராத்தில் தேசிய அளவிலான பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட் லிப்ட் போட்டிகளை இந்திய விளையாட்டு கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் நடத்தியது. இதில் திருப்பூரை சேர்ந்த ஆதித்யா என்ற 16 வயது மாணவரும் கலந்துகொண்டார். முதல் நாள் பெஞ்ச் பிரஸ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட 83 எடைப் பிரிவில் 100 கிலோ எடைப் பிரிவில் அவர் தங்கப் பதக்கம் வென்றார். 

அடுத்த நாள், 19 வயதுக்குட்பட்டோருக்கான டெட் லிப்ட் (185 கிலோவைத்) தூக்கி 83 எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெற்றோர், நண்பர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் ஆதித்யாவுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். ஆதித்யாவை ஊக்குவித்த அவரது பள்ளி தலைமை ஆசிரியர் வசந்த ராஜ், ஆசிரியர் ராகேஷ், உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், ஆசிரியர் ஷாலினி மற்றும் ஜிம் மாஸ்டர் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி கூறினார் ஆதித்யா.

Related Video