வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.. களைப்பு தீர இளநீர் தோப்புக்குள் குதித்த திருடர்கள்.. பெரம்பலூர் அருகே சம்பவம்!

பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் கிராமத்தில் மூன்று வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.9 பவுண் நகை,ரூ1லட்சத்து 45 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் களைப்பு தீர அருகில் இருந்த தோப்பில் இளநீர் வெட்டி குடித்துச் சென்றுள்ளனர்.

Share this Video

பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் கிராமத்தில் சுப்ரபணி என்பவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 6 1/4 பவுன் ரூ.5,000 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.சுப்பரமணி மனைவியுடன் மாடியிலும் மகள் கீழ் வீட்டிலும் தூங்கிகொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.மேலும் அருகே இருந்த வசந்தி என்பவரது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் அங்கே நகை பணம் இல்லாததால் அதன் அருகே இருந்த ஜெயக்குமார் என்பவர் வீட்டில் புகுந்துள்ளனர்.

அங்கிருந்த 3 1/2 பவுன் - 1 லட்சத்து 40 ஆயிரம் பணம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.மேலும் திருடிய களைப்பு தீர அருகில் இருந்த தோப்பில் இளநீர் வெட்டிக்குடித்து சென்றுள்ளனர்.சோமண்டாபுதூரில் நள்ளிரவில் மூன்று வீடுகளில் நகைபணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Video