
Oscar Awards Statue
மெட்ரோ கோல்டன் மேயர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கலை இயக்குநர் செட்ரிக் கிபான்ச் தான் ஆஸ்கார் விருதை வரைந்தார். அதுவும், வாள் ஏந்திய பெண் நிற்பது போன்ற வடிவததை வரைந்தார். அதற்கு அமெரிக்க சிற்பியான ஜார்ஜ் மேலேண்ட் ஸ்டான்லி தான் முப்பரிமாண வடிவத்தை கொடுத்தார். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், எழுத்தாளர்கள் தான் ஒரு படம் உருவாவதற்கு காரணம். இந்த 5 முக்கிய தூண்களை சுட்டிக் காட்டும் வகையில் தான் ஆஸ்கார் சிலையில் 5 ஸ்போக்குகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.