
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கடலூர் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம்... ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!
கடலூரில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலூரில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடலூரில் உள்ள அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சப்தமாதாக்களில் எழுந்தருளி உள்ள அருள்மிகு, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்கள் மற்று துளசிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் அம்மன் அழகாக காட்சி அளித்தார். இதை அடுத்து அம்மனுக்கு செவ்வாழை பழங்கள், சக்கரை பொங்கல், கிழங்குகள் ஆகியவை வைத்து மஹா தீபாரதனை காட்டபட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேய்பிறை பஞ்சமியில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் துளசி மற்றும் இனிப்புகள் வழங்கபட்டன. இந்த கோயில் 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.