
உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு தங்க மோதிரம்.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்!
சென்னை அரும்பாக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை, இளைஞர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சம்பவம் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணன் என்பவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.