பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்து செல்லும் இளைஞர் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கக் கூடிய இடங்களில் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்றுள்ளார்.

இதை பெருந்து நிலையத்தில் இருந்த மற்றொரு நபர் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வேகமாக பரவி வருகிறது. வீடியோ பரவி வரும் நிலையில் திருமணம் செய்து கொண்டவர்கள் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video