
வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும் ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ? சீமான் பேட்டி
வாக்கு திருட்டு உள்ளிட்டவற்றை சரி செய்ய மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் வாக்குச் சீட்டு முறையால் 90 விழுக்காடு நேர்மையாக நடைபெற வாய்ப்புள்ளது. அதுவும் முழுமையாக நடக்க வாய்ப்பில்லை.மொத்தமாக தேர்தல் நடைபெறுவதில் மாற்றம் வர வேண்டும்.முதலமைச்சர் பீகாருக்கு சென்று வாக்கு திருட்டுக்கு எதிராக பேரணி செல்வது தேர்தல் அரசியல் தான்.பெரியார் பிறக்காத பீகாரில் ஜாதிவாரி கணப்கெடுப்பு நடத்துகிறார்கள். ஆனால் பெரியார் பெயரை கூறி சமூக நீதி என பேசுபவர்கள் கணக்கெடுப்பு நடத்தாதது ஏன் ?வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும், ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ?