Asianet News TamilAsianet News Tamil

வாக்கு சேகரிக்க கூப்பிட்டால் வருவேன்.. கூப்பிடவில்லை என்றால் வரமாட்டேன் - மதுரையில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி!

Subramanian Swamy : மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்

பிஜேபி வெற்றி பெற்றால் வடநாட்டு தலைவரை காக்கா பிடிக்க கூடாது. காக்கா பிடிப்பது தெரியவும் கூடாது அப்போதுதான் பிஜேபி மேலே வரும். இல்லாவிட்டால் டெல்லி என்ன சொல்கிறதோ அதுதான் நடக்கப் போகிறது. நேற்று வரை தனியா நிற்போம் அதுக்கப்புறம் போய் இவரிடம் பேசுகிறோம் அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லக்கூடாது. 

அடுத்த கேபினட்டில் நீங்கள் இடம் பெறுவீர்களா என்ற கேள்விக்கு?

மோடி இருந்தால் நான் போக மாட்டேன், அவர் இரண்டு முறை பிரதமராக இருந்திருக்கிறார். வேறு யாராவது வரவேண்டும் என்றார். 

கோயம்புத்தூர் தொகுதியில் பிரதமர் மோடியின் ஆணைக்கிணங்க போட்டியிடுகிறேன் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு?

அதைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

இந்தியா முழுவதும் பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் என்ற கேள்விக்கு.?

அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நிரூபிக்கும். 273 இருந்தால் போதுமானது தான் ஆனால் 250க்கு மேல் வெற்றி பெற்றால் எனக்கு திருப்தி என்றார்.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு?

இந்தியாவில் இந்து மக்களை பிராமணன், சத்ரியன், சூத்திரன் என பிரித்து வைத்திருக்கிறார்கள். அனைவருமே இந்துக்கள் என்பதை ஒற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசம் இல்லை? நம்மளுடைய ரத்தத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா இந்தியர்களின் ரத்தமும் ஒன்றுதான். அந்த உணர்வு வரவேண்டும் என்றார். 

இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துள்ளது என நிதி அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு?

யோ நிர்மலா சீதாராமனா? வேண்டாம் வேண்டாம் என்றார். உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு..? எனக்கு தெரியும்.! எனக்கு தெரியும்.? இந்தியாவின் GDP-ல் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துள்ளது என அவர்கள் வேண்டுமானால் சொல்லட்டும். பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேளுங்கள்.? பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு எனக்கு இஷ்டம் இல்லை. ஆனால்., நாட்டில் ஒற்றுமையை உண்டாக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக மக்களை பிரித்தாளுகின்றனர். 

மக்களை பிளவுபடுத்த வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்ததை திமுக பேசுகிறது. நம்மளுடைய வரலாற்று புத்தகத்தில் என்ன இருக்கிறதோ மக்கள் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

முதல்வரின் கைதுக்கு பாஜகவின் சூழ்ச்சிதான் காரணம் என எதிர்க்கட்சி கூறுவது குறித்த கேள்விக்கு?

எதிர்க்கட்சி அப்படித்தான் சொல்வார் நீதிமன்றத்தில் வாதம் செய்து நீதியை பெற்றுக் கொள்ளட்டும் என்னை கூட சோனியா காந்தி ஆட்சி காலத்தில் சிதம்பரம் என்ற மக்கு அவரை மக்கு தான் என்று சொல்ல வேண்டும் மக்குத்தனமாக என் மீது நான்கு வழக்குகள் போட்டார் அது அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது நாம் என்ன தவறு செய்தோம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் சென்று வெல்ல வேண்டும் என்றார்.

பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருவீர்களா என்ற கேள்விக்கு.?

கூப்பிட்டா வருவேன் கூப்பிடவில்லை என்றால் வரமாட்டேன் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு எப்போ வேண்டுமானாலும் வருவேன் ஏனென்றால் இது என்னுடைய சொந்த ஊர். பிரச்சாரத்திற்கு நான் வருவதற்கு அவர்கள் தான் முடிவு பண்ண வேண்டும். நான் வந்து கேட்க மாட்டேன் என்னை அழையுங்கள் நான் வந்து பிரச்சாரம் செய்கிறேன்.

Video Top Stories