
நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டாமா? - சௌமியா அன்புமணி
சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கிறார்கள். ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டாமா? விவசாயிகள் கத்தி கதறும் வரை காத்திருக்கிறார்கள்.டாஸ்மாக்குக்கு கேமரா போலீஸ் என பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும், முளைத்தும் நெல்கள் வீணாகி வருவதாகவும், எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.