
அம்மா கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தை, திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள்
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது மேலும் விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதா? என்று விவாதம் நடைபெற்று வருகிறது. பாரத பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சந்திப்பு நாளில் தமிழக அரசால் மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது அரசியல் ஆதாயம் தேடி உள்ளதா? என்று சர்ச்சையாகி வருகிறது. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபொழுது மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரி பெற்று தந்ததை நாடு அறியும். அதேபோல புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிவித்தார் .