நீங்கள் கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாட்டை நாங்கள் உருவாக்கிக் காட்டிவருகிறோம்.. முதல்வர் ஸ்டாலின்!
நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன் என கருணாநிதிக்கு 101-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன் என கருணாநிதிக்கு 101-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணியளவில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் 9.15 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
இந்நிலையில், கருணாநிதி பிறத்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தலைவரென்பார், தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்,சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் - அத்தனையும்தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து அன்பாலே'அண்ணா' என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே - அவர் அன்னைபெயரும் தந்தார்.- என்று முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.
தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செலுக்கிய சிற்பி, நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. ஒரு ரூபத்தில் வாழ்ந்த பல ரூபம் கலைஞர் என புகழாராம் சூட்டியுள்ளார்.