விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

Viruthunagar : விருதுநகரில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நகரின் முக்கிய பிரதான சாலையான பழைய பேருந்து நிலையம் புள்ளளக்கோட்டை சாலையில், நெடுஞ்சாலை துறையினர் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

First Published Mar 19, 2024, 11:35 PM IST | Last Updated Mar 19, 2024, 11:35 PM IST

பொதுவாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி இரவு நேரங்களில் நடைபெறும் நிலையில், எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல், அறிவிப்பு பதாகைகள் எதுவும் வைக்கப்படாமல் மாலை வேளையில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. இந்நிலையில் மீனாம்பிகை பங்களா பகுதியில், சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்து செல்வதற்கு வழியில்லாமல் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது.

இதனால் சாலை பணியாளர்களுக்கும், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாலை வேளையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் சாலையை அமைத்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Video Top Stories