விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! இரங்கல் தெரிவித்த கையோடு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 

First Published Jan 4, 2025, 3:25 PM IST | Last Updated Jan 4, 2025, 3:25 PM IST

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56), குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54), காமராஜ் (54), வீரார்பட்டியைச் சேர்ந்தகண்ணன் (54) , அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (46), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய 6 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு
சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

Video Top Stories