வேங்கை வயல் வேகம் எடுத்ததற்கு விஜய் தான் காரணமா? துரை வைகோ சொல்வது என்ன?
என்னை பொறுத்தவரை உரிய விசாரணை இல்லாமல் ஆதாரம் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுள்ளன. என்னை பொறுத்தவரை உரிய விசாரணை இல்லாமல், ஆதாரம் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும்.
வேங்கை வயலுக்கு விஜய் வருவதாக இருந்தால் தான் இவ்வழக்கு வேக வேகமாக முடிக்கப்பட்டது என்பது கூறுவது முழுக்க முழுக்க தவறு. உரிய வீடியோ ஆடியோ ஆதாரங்கள் கிடைத்ததின் பேரில் தான் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.