
அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன.. சொல்ல முடியாத அளவுக்கு வேதனை..! - விஜய் பேச்சு
நமக்கு எதிராக முதல்வர் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார். ஆனால் இதெல்லாம் ஏன் நடந்தது? எதற்கு நடந்தது? என மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்து விட்டாரா? இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத நிபந்தனை எனக்கு விதிக்கப்பட்டது. மக்களை பார்க்கக் கூடாது. எழுந்து நிற்க கூடாது. வேனை விட்டு வெளியில் வரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.