நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வாங்கி கொடுத்தது விஜயா? ராஜீவ் காந்தி பகீர்!
நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்வில், ராஜீவ் காந்தி சீமான் மற்றும் விஜய் குறித்து சில பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர் இன்றுசென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: சீமான் – பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் வாங்கியது நான் தான். புகைப்படம் எடிட் ஆகி வந்த உடன் அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் நான் தான் கொடுத்தேன்; கம்பு சுற்ற வேண்டுமென்றால் களத்திற்கு வர வேண்டும், கட்சியினர் மத்தியில் சுற்றக்கூடாது
தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தவர் விஜய் தான். சீமானுக்கு வெறும் 4.8 விழுக்காடு தான் இருந்தது. விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி விட்டார். ஆனால், தேர்தலில் போட்டியிட அவர் வரவில்லை. அவரும் சீமானும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தவறான தகவல்கள் வெளியே வந்தன. அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அண்ணன் தம்பி என்று பேசியவுடன் விஜயின் ஆதரவாளர்கள் சீமானுக்கு ஓட்டு போட்டார்கள். 2026 இல் சீமான் டெபாசிட்டை இழப்பார் என ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.