
விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு....3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்த மக்கள் !
விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் டாப் கன் இராட்டினம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 50 அடி உயரத்தில் 36 பேருடன் சிக்கிக் கொண்டதால் அச்சமடைந்தனர். பதட்டம், பயம் ஏற்பட்டதாகவும், குடிநீர், உணவு கூட தராமல் விஜிபி நிர்வாகம் அலட்சியம் 3 மணி நேரம் தவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு. இந்நிலையில் 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்த 30-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் .