
வேங்கைவயல் விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது!சிபிஐ விசாரணை தேவை-திருமாவளவன் பேட்டி!
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.