
முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும் ! வேல்முருகன் பேட்டி
புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகும் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றாமல் இன்னமும் ரசிகர் கூட்டமாக வைத்துள்ளார் அதன் வெளிப்பாடு தான் திருச்சியில் நடைபெற்றது .பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அவர்கள் ஏற்படுத்தினர் .முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும் . தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய பிறகு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி தான் விஜய் குறித்து பிரபலம் செய்து வருகிறது ஆனால் இதுவரை விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க விஜய் மறுக்கிறார் . என்று தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி .