
பாஜக அரசு SIR இல் கவனம் செலுத்தியதால் தான் டெல்லியில் வெடிகுண்டு வெடித்துள்ளது ! வேல்முருகன் பேட்டி
தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு பாஜக அரசு இஸ்லாமியர் மற்றும் முஸ்லிம் வாக்கு கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களது வாக்கை பறிக்க முயற்சி செய்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிப்பது மட்டுமில்லாமல் எதிர்த்து வருகிறது, வடமாநிலத்தில் பொதுமக்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து படிக்கலாம் வேலை செய்யலாம் ஆனால் தமிழ்நாட்டின் தலைவர்கள் யார் வரவேண்டும் என தீர்மானிக்கும் நிலையை தற்பொழுது தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது, மேலும் டெல்லியில் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய அரசு கார் குண்டு வெடிப்பு நடக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது, அமித்ஷா ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்திய பாதுகாப்பு எல்லையில் தீவிரப்படுத்த பணியை விட்டு உள்நாட்டு வாக்குகளை பாஜக அரசு அபகரிக்க SIR இல் கவனம் செலுத்தியதற்கு காரணமாக தான் டெல்லியில் வெடிகுண்டு வெடித்துள்ளது என காஞ்சிபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்