போலீஸ் கண்முன்னே ரோட்டில் வீசப்பட்ட காய்கறிகள்.. ஆத்திரமடைந்த விவசாயி..! காரணம் என்ன..? வீடியோ

8 மணி முதல் 11 மணி வரை அங்கையே  சிறை பிடித்து வைத்துள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த பெண் #டிஎஸ்பி இடம் அந்த நபர் முறையீடு செய்துள்ளார் அவரும் இப்பிரச்சினையை தீர்க்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர்..

Share this Video
இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் #தாமரைப்பாக்கம்_கூட்டுச்சாலையில் அகரம் கண்டிகையை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் காய்கறி கீரைகளை மூட்டையில் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காலை சுமார் 8 மணி அளவில் திருவள்ளூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் வழிமறித்த C5 #வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதற்கு கார்த்தி தான் எடுத்துச்செல்வது காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் என்பதால் அனுமதிக்குமாறு பலமுறை மன்றாடி கேட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் மதியம் 1மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வரலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான காய்கறிகளை விவசாயிகள் எடுத்துச்சென்று விற்பனை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது வெங்கல் காவல் நிலைய போலீசார் அரசின் இந்த உத்தரவை துளியும் மதிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக மேற்படி விவசாயியை காலை 8 மணி முதல் 11 மணி வரை அங்கையே சிறை பிடித்து வைத்துள்ளனர்.
பின்னர் அந்த வழியாக வந்த பெண் #டிஎஸ்பி இடம் அந்த நபர் முறையீடு செய்துள்ளார் அவரும் இப்பிரச்சினையை தீர்க்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைத்திருந்த காய்கறி மூட்டையை அவிழ்த்து ரோட்டில் கொட்டியுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபரை போலீசார் வெங்கல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர் மேலும் வழக்கு பதிவு செய்து அவரின் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Video